தற்ப்போது KGF 2 படத்தில் ஆதீரா என்ற முக்கிய வில்லன் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இதையடுத்து அவருக்கு கொரோன தொற்று என வதந்தி பரவிய நிலையில் இது குறித்து ட்விட் பதிவிட்ட நடிகர் சஞ்சய் தத்,
” மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், எனக்கு கொரோனா இல்லை வேறு சில காரணங்களால் மருத்துவமனையில் உள்ளேன். மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்புவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்த அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதித்து இருப்பதாகவும், நான்காம் கட்டத்தில் இந்த புற்று நோய் இருப்பதால் அவர் உடனடியாக அமெரிக்கா சென்று சிகிச்சை செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்த தனது டுவிட்டரில், “ஒரு சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய கால ஓய்வு எடுக்கப் போகிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருப்பதால் என்னுடைய உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். உங்கள் அன்பு மட்டும் வாழ்த்துக்கள் உடன் நான் விரைவில் மீண்டு வருவேன். என பதிவிட ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்து விட்டனர்.
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…