சந்தானத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ‘டகால்டி’ வசூல் – எவ்வளவு தெரியுமா?

Published on: February 3, 2020
---Advertisement---

c870cb3daefc60c4464cea875c91d21d

சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் டகால்டி. இப்படத்தை இயக்குனர் விஜய் ஆனந்த் என்பவர் இயக்கியிருந்தார். 

இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. சந்தானம், யோகிபாபு என இருவர் நடித்திருந்தும் பெரிதாக நகைச்சுவை காட்சிகள் இல்லை என்பதும், பலவீனமான திரைக்கதை மற்றும் வில்லனால் இப்படம் தோல்வி அடைந்துள்ளது.

படம் வெளியாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இப்படம் தமிழகத்தில் மொத்தமாக வெறும் ரூ.4 கோடியே 6 லட்சத்தை மட்டுமே இப்படம் வசூல் செய்துள்ளதாம். 

இந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி சந்தானம் நடிப்பில் உருவான ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகவுள்ளது. இப்படம் அவருக்கு கை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்..

Leave a Comment