பிக்பாஸ் 5ல் கலந்துகொள்ளும் பிரபல நடிகர்... வெளியான செய்தி!!
ஹிந்தியில் முதலில் தொடங்கிய பிக்பாஸ் அங்கு 14 சீசன்களை தாண்டி தற்போது 15வது சீசன் நடைபெற்று வருகிறது. தமிழில் இப்போதுதான் நான்கு சீசன் வெற்றிகரமாக முடிந்து ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. முன்னதாக முடிந்திருந்த நான்கு சீசன்களில் முறையே ஆரவ், ரித்விகா, முகின், ஆரி ஆகியோர் டைட்டிலை கைப்பற்றினர்.
கடந்த நான்கு சீசனையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்க உள்ளார். இதில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து இதில் கலந்துகொள்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அவர் பிக்பாஸ் வீட்டிற்கு முன்னாள் தான் நிற்கும் போட்டோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதற்காக சினிமா உலகை சேர்ந்த பிரபலங்கள் சிலரும் அவரை கலாய்த்து வாழ்த்து சொல்லியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழ் நடிகர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வந்துள்ளது.தேவ், ஓ மை கடவுளே, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களில் நடித்திருந்த நடிகர் சந்தோஷ் பிரதாப் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்றாலும் அவர் கலந்துகொள்ளவிருப்பது கிட்டத்தட்ட உறுதி என்றே தகவல்கள் வருகின்றன. முதல் மூன்று சீசன்களுடன் ஒப்பிடுகையில் நான்காவது சீசன் சரியாக போகவில்லை என்பதால் மிகவும் பார்த்து பார்த்து ஆட்களை செலக்ட் செய்து வருகிறார்களாம்.

முதல் சீசனைப்போலவே இந்த சீசனை பிரபலமாக்கவேண்டும் என மெனக்கெடுகிறார்களாம். முன்னதாக விஜய் சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த வசுந்தரா இந்தமுறை பிக்பாஸில் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்பட்டது.