சரத்குமாரை பழிவாங்கத் துடித்த வரலட்சுமி... அதுக்காக இப்படியா பண்றது?
சமீபத்தில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம் தான் மீடியாக்களில் பேசுபொருளானது. ஆனால் அவருக்கும், வரலட்சுமிக்கும் இடையே பெரிய பகை இருந்ததாம். அதனால் சரத்குமாரைப் பழிவாங்க வரலட்சுமி துடித்தாராம். அடுத்து என்ன செய்தார் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு இப்படி சொல்கிறார்.
தன் அம்மா சாயாதேவியை தனியாகத் தவிக்க வைத்து விட்டு போய்விட்டார் சரத்குமார் என்று வரலட்சுமிக்கு அவர் மீது கோபம் உண்டு. அவருக்கு பூஜா என ஒரு தங்கையும் உண்டு. அது மட்டுமில்லாமல் அவரை நாமும் சினிமாவில் இறங்கி பழிவாங்க வேண்டும் என்று நினைத்தாராம்.
அதனால் தான் அவரும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தாராம். அந்த நேரத்தில் பாய்ஸ் படத்திற்கு ஷங்கர் புதுமுகங்களை தேர்வு செய்து கொண்டு இருந்தார். நகுல் செலக்ட் ஆயிட்டாரு. நல்ல டான்ஸ் ஆடுவார்னு பரத் செலக்ட், மணிரத்னம் அசிஸ்டண்ட்னு சித்தார்த் செலக்ட், தமன் என அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
கதாநாயகிக்கு சரத்குமாரின் மகள் வரலட்சுமி இருக்காங்கன்னு சொன்னதும் அந்த விஷயம் சரத்குமாரின் காதுகளுக்கு எட்டியதாம். உடனே அவர் அதற்கு சம்மதிக்கவில்லையாம். அதனால் தான் அவருக்கு அந்த வாய்ப்பு போனதாம். இதனாலும் வரலட்சுமிக்கு சரத்குமார் மீது கோபம். அதனால் தான் போடா போடி படத்தில் வரலட்சுமியே அந்த சான்ஸ வாங்கினாராம்.
Also Read: எங்கே போனாலும் விடமாட்டேன்... விடாது கருப்பு என துரத்திய ஜெயம் ரவி மனைவி... நடந்தது இதுதான்..!
அந்தப் படம் ஹிட்டானால் வரலட்சுமி தமிழ் திரை உலகில் பெரிய லெவலுக்கு வந்து விடுவாராம். அந்தப் படம் ஓடாததால் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்து விட்டார். அது மட்டும் ஓடியிருந்தால் இன்று லேடி சூப்பர்ஸ்டார் அவர் தான்...! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.