சரவண பவன் ஹோட்டல் உணவில் நெளிந்த புழு ? – வாடிக்கையாளர் அதிர்ச்சி !

Published On: December 14, 2019
---Advertisement---

8d1ee5d189cb424faf8cddf1ec55cc4d

சென்னையில் உள்ள சரவண பவன் ஹோட்டலின் கிளை ஒன்றில் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட உணவில் உயிருடன் புழு நெளிந்து காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.

உயர்தர சைவ உணவகம் என்ற பெருமையுடன் உலகம் முழுவதும் கிளைபரப்பி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது சரவண பவன் உணவகம். சென்னை எக்மோரில் உள்ள இதன் கிளை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்குப் பரிமாறப்பட்ட ரவா கிச்சடியில் புழு ஒன்று உயிருடன் நெளிந்ததாக அவர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இதற்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் சரியான பதில் சொல்லவில்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் சமைக்கப்பட்ட உணவில் உயிருடன் புழு நெளிவதற்கு வாய்ப்பில்லை என்பதால் இலையை ஒழுங்காகக் கழுவாததால் புழு இருந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் வாடிக்கையாளருக்கு சுத்தமான உணவு வழங்காத நிர்வாகத்தின் மீதுதான் தவறு என சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமான புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

Leave a Comment