
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள் சரவணன் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் அமைத்து பாடல் காட்சிகள் நடைபெற்றது. இதனை அடுத்து காஷ்மீரிலும் ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் பா.விஜய் இணைந்துள்ளார். இவர் ஒரு பாடலாசிரியர் என்பதும் நடிகர் என்பதும் தெரிந்ததே.
ஆனால் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி படத்தில் இவர் நடிகராக பணிபுரிகிறாரா? அல்லது பாடல்கள் எழுதுகிறாரா? என்பது குறித்த தகவல் இல்லை. இருப்பினும் இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி மற்றும் அருள் சரவணனுடன் பா.விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருந்து இந்த படத்தில் பா.விஜய் பணிபுரிவது உறுதியாகிறது என்பது மட்டும் தெரிகிறது