நான் யாருன்னு நிரூபிக்கிற நேரம் இது! – இரத்தம் தெறிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ டிரெய்லர் வீடியோ…

Published on: July 13, 2021
---Advertisement---

e07e9da403e4d440d1ba074d8818439a

கபாலி, காலா, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய பா. ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ எனும் படத்தில் ஆர்யா நடித்து முடித்துள்ளார்.  இப்படம் வட சென்னையில் பிரபலமான குத்து சண்டையை மையமாக கொண்டது. இப்படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை ஏற்றி ஆர்யா நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது, 

fc69b8166e209f599e1c6d1f6e3610dd

அதுமட்டுமின்றி உலகப்புகழ் பெற்ற Rocky திரைப்படம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அந்த அளவிற்கு சார்பட்டா பரம்பரை படமும் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை. எப்போது அனுமதி கிடைக்கும் என தெரியவில்லை. இப்படம் நேரிடையாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. வருகிற 22ம் தேதி இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார். இதில், அதிரடியனா குத்துச்சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Leave a Comment