திரைப்படங்களில் யதார்த்தத்தைக் காட்டிய சசிக்குமார்…

திரைப்படம்  என்றாலே 5 சண்டை, 5 பாட்டு என்ற காலம் இருந்தது. அப்படி இருந்தால் தான் படம் ஓடும் என்ற நிலையும் இருந்தது. அதன் பின்னர் பாடல்களே இல்லாமலும் படம் வெளியானது. தூள் கிளப்பும் சண்டைக்காட்சிகள், பிரம்மாண்டம் இருக்க வேண்டும் என்ற நிலை வந்தது. கதைக்காக எதையும் செய்யும் கதாநாயகர்கள் என்கிற நிலை இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக எப்படியும் படம் எடுக்கலாம் என்ற நிலை மாறியது. ஒரு படம் என்றால் இத்தனை சிறப்புகள் இருக்க வேண்டும் என்ற வெற்றிக்கான அடித்தளம் அமைந்த காலகட்டத்தில் புதுப்புது கதைகளும், இயக்குனர்களும் வரத் தொடங்கி விட்டார்கள். அப்படி வந்தவர் தான் சசிக்குமார். இவர் யதார்த்தத்தை தமிழ் சினிமாவில் கொண்டு வந்து படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 

சசிக்குமார் இயக்;கத்தில் 2008ல் வெளியான சுப்பரமணியபுரம் படம் சக்கை போடு போட்டது. 2008ல் சிறந்த படத்துக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. சிறந்த படத்துக்கான விஜய் விருதும் கிடைத்தது. இந்தப் படத்தில் சசிக்குமார் பரமன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். 2009ல் வெளியான நாடோடிகள் படத்தில் கருணா என்ற பாத்திரத்தில் நடித்து இருந்தார். 2010ல் வெளியான ஈசன் படமும் இவரது இயக்கத்தில் வந்ததுதான்.

2010ல் சம்போ சிவ சம்போ என்ற தெலுங்கு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். அதே ஆண்டில் வெளியான போராளி தமிழ்படத்தில் இளங்குமரன் கேரக்டரில் நடித்தார். 

2012ல் வெளியான சுந்தரபாண்டியன் இவருக்கு பெரிய திருப்பத்தைக் கொடுத்தது. இந்த படம் பட்டி தொட்டி எங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. 2015ல் வெளியான தாரை தப்பட்டை படமும், 2016ல் வெளியான வெற்றிவேல் படமும் இவருக்கு பெயர் கொடுத்த படங்கள். இவர் மொத்தம் நடித்த படங்கள் 21. 

நாடோடிகள் 2, கென்னடி கிளப், என்னை நோக்கி பாயும் தோட்டா, பேட்ட, கொடி வீரன், குட்டி புலி, பிரம்மன், தலைமுறைகள், பலே வெள்ளையத் தேவா, கிடாரி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

சசிக்குமார் முதன்முதலில் நடித்து இயக்கிய படம் சுப்பிரமணியபுரம். இந்த படத்தை சசிக்குமார் இயக்க நண்பர்; சமுத்திரக்கனி நடித்திருப்பார். பதிலுக்கு நாடோடிகள் படத்தில் சமுத்திரக்கனி இயக்க அவரது நண்பர் சசிக்குமார் நடித்திருப்பார். இரண்டு படங்களுமே தமிழ்சினிமாவில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிய படங்கள் தான்.  தற்போது அவர் நடித்த டாப் 5 படங்களைப் பார்க்கலாம். 

சுப்பிரமணியபுரம் 

1980களில் நடக்கும் கதை. அக்கால சூழலை அப்படியே நம் கண்முன் காட்டியிருப்பார். மதுரை நகரில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களைப் பற்றியும், அவர்களது காதல் பற்றியும் நடக்கும் கதை. அறிமுக இயக்குநர் சசிகுமார் இயக்கி ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கறுப்பு ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அறிமுக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இயல்பான கதை, நடிப்புக்காக இத்திரைப்படம் பேசப்பட்டது.

1980களில் மதுரை நகரில் படித்த வேலையில்லாத இளைஞர்கள் அரசியல்வாதிகளின் தன்னலத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வீணாவது, காதல்-நட்பில் உள்ள துரோகம் குறித்து கதை நகர்கிறது. ஜேம்ஸ் வசந்தன் இசையில் கண்கள் இரண்டால் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
 
நாடோடிகள் 


சசிக்குமார், கஞ்சா கருப்பு, அபிநயா, அனன்யா உள்பட பலர் நடித்தனர். சம்போ சிவசம்போ…, ஆடுங்கடா…உலகத்தில் எந்த கதை ஆகிய பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனவை. இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் சுந்தர் சி பாபு. மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, சமுத்ரக்கனி இயக்கிய வெற்றித் திரைப்படம். 

கென்னடி கிளப்

2019ல் வெளியான படம் கென்னடி கிளப். சுசீந்திரன் இயக்கிய படம். பாரதிராஜா, சசிக்குமார், சூரி நடித்துள்ள குடும்பத் திரைப்படம். டி இமான் இசையமைப்பில் உருவான படம். இந்தப் படத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து கதை பின்னப்பட்டுள்ளது.

கபடி கோச்சாகவும், ரயில்வே கபடி வீரராகவும் சசிக்குமார் நடித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. ஒரு டீசர்டை மாட்டிக்கொண்டு கழுத்தில் விசிலைத் தொங்க விட்டபடி படத்தில் கோச்சராகவே மாறியிருப்பார் சசிக்குமார். பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் சரியாக போகாதது ஏமாற்றம் தான்.

குட்டிப்புலி 


2013ல் வெளியான இப்படத்தில் சசிக்குமார், லட்சுமி மேனன், சரண்யா உள்பட பலர் நடித்தனர். எம்.முத்தையா இயக்கிய வெற்றிப்படம் இது. ஜிப்ரான் இசையில் அருவாக்காரன், காத்து காத்து, ஆத்தா உன் சேலை ஆகிய பாடல்கள் ஹிட்டானவை. கிராமத்துச் சூழலை மையமாகக் கொண்ட கதை. 

கொடிவீரன் 

சசிக்குமார் தயாரிப்பில் எம்.முத்தையா இயக்கிய படம் கொடி வீரன். என்.ஆர்.ரகுநாதன் இசையமைப்பில் உருவான படம். சசிக்குமாருடன் விதார்த், மகிமா நம்பியார், சனுசா, பசுபதி, பாலா சரவணன், பூர்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். அண்ணன் தங்கை பாசத்தைக் கொண்ட படம். கிராமிய சூழலை மையமாகக் கொண்ட படம். அய்யோ அடி ஆத்தே, அண்டம் கிடுகிடுங்க, தங்கமே உன்ன பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா, நான் நாராயணன், எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

Published by
adminram