More
Categories: Cinema News latest news

சூட்டிங்ஸ்பாட்ல சாப்பாட்டுல இருந்த கல்…! சத்யராஜ் செய்த லந்தைப் பாருங்க… இப்படியும் ஒரு மனிதரா?

தமிழ்ப்படங்களில் நடிக்கும் பெரும்பாலான கலைஞர்களுக்கு சாப்பாடு செய்வது என்றால் அது அண்ணாச்சி ஏ.எம்.ராதாகிருஷ்ணன் தான். அவர் தன்னோட தொழில் சம்பந்தமாக திரையுலகில் நடந்த கலகலப்பான அனுபவங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

இட்லி எந்தக் கெடுதலும் இல்லாத உணவு. உளுந்து அரிசி அவ்வளவு தான். நாலு பங்கு அளந்தால் அதுல ஒரு பங்கு உளுந்து. அது தவிர உப்பு. வேற ஒண்ணும் இல்லை. இரண்டையும் தனித்தனியாக மாவாக்கி அதை ஒண்ணா கலந்து 6 மணி நேரம் ஊற வைத்தா இட்லி மாவு அப்படியே உப்பி மல்லிகைப் பூ மாதிரி வரும்.

Advertising
Advertising

அதே போல பொங்கலும் அப்படித்தான். நம் முன்னோர்கள் பருப்பு மந்தம் என்பதற்காக அதனுடன் மிளகு, சீரகம், இஞ்சின்னு பல அருமையான சேர்மானங்களையும் அதனுடன் கலந்து கொடுத்துள்ளனர். அதனால் பொங்கல் சாப்பிட்டால் எந்த விதமான பக்கவிளைவும் கிடையாது.

சத்யராஜ் சார் எல்லாம் அற்புதமான மனிதர். கல் இருந்தா கூட இந்தக் கல்லு கொஞ்சம் வேக்காடு கம்மியா இருக்கு. நல்லா வேக வைச்சி அண்ணாச்சியை அனுப்ப சொல்லுங்கப்பான்னு சொல்வார். அது என்னம்மோ சம்மட்டியை வச்சி அடிச்ச மாதிரி தான் தெரியும். பாண்டிச்சேரில வந்து மங்கை அரிராஜோட படம். சத்யராஜ் டபுள் ஆக்ட்ல பண்ணியிருப்பார்.

கீரையில ஒரு கல்லு போச்சு. அவரு ஒண்ணும் சொல்லல. கல்லை எடுத்தாரு. ‘இதைக் கொஞ்சம் நல்லா வேக வச்சி அண்ணாச்சிட்ட கொடுத்து அனுப்பச் சொல்லு’. வேலை மெனக்கிட்டு டிஷ்யு பேப்பர்ல கல்லை வச்சி மடிச்சிக் கொடுத்தாரு. அப்புறம் நைட்டே அவரை ஓட்டல்ல போய் பார்த்து ‘சார் இந்த மாதிரி தெரியாம நடந்துச்சு’ன்னு சொன்னேன். ‘ஐயோ நீங்க வேற, சும்மா சொல்லிவிட்டேன். போய் வேலையைப் பாருங்க…’ன்னாரு. அப்படி ஒரு நல்லவரு அவரு என்கிறார் அண்ணாச்சி.

Published by
ராம் சுதன்