தகடு தகடு மூலம் பிரபலமான சத்யராஜ்: எங்கப்பா இந்த பாவமான மூஞ்சிய வாங்குன என கவுண்டமணி சொல்வதில் இருந்து தகடு தகடு என தனது கொடூரமான வில்லத்தனமான முகம் வரைக்கும் சினிமாவில் எப்படிப்பட்ட கதாபாத்திரமானாலும் அதை திறம்பட நடித்துக் கொடுப்பதில் சிறந்த நடிகராக கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சத்யராஜ்.
இப்பொழுதும் ஹீரோ: ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இன்று ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிறமொழிப் படங்களிலும் இவர்தான் இப்பொழுது ஒரு தேடப்படும் நடிகராக திகழ்ந்து வருகிறார். இருந்தாலும் கதையின் நாயகனாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ்.
நோ சொன்ன படம் சூப்பர் ஹிட்: இந்த நிலையில் தன்னுடைய முடி கொட்டியதன் ரகசியத்தை ஒரு பேட்டியில் மிகவும் கலகலப்பாக பேசியிருக்கிறார் சத்யராஜ். அதாவது சத்யராஜ் ஹீரோவாக நடித்த காலத்தில் பல தவறான முடிவுகளை எடுத்ததாக கூறினார். என்னவெனில் கே. எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க சான்ஸ் வந்ததாம். ஆனால் அந்த நேரத்தில் வேறொரு படத்தில் கமிட் ஆனதால் கே.எஸ்.ரவிக்குமார் பட வாய்ப்பை மிஸ் பண்ணியிருக்கிறார்.
முடி கொட்டியதன் ரகசியம்: இதில் கூத்து என்னவெனில் அவர் நோ சொன்ன கே.எஸ். ரவிக்குமாரின் அந்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அதே படத்தோடுதான் சத்யராஜ் நடித்த படமும் ரிலீஸ் ஆகின்றன. கே.எஸ்.ரவிக்குமாரின் படம் 25 வாரங்கள் தியேட்டரில் ஓடியதாம். ஆனால் சத்யராஜின் படம் இரண்டு வாரங்கள்தான் ஓடியதாம். இப்படி இருந்தால் மனுஷனுக்கு தூக்கம் வருமா? இதை நினைத்தே என் தலைமுடி கொட்டி விட்டது என மிகவும் ஜாலியாக கூறினார் சத்யராஜ்.
தற்போது சத்யராஜ் ரஜினி நடிக்கும் கூலி படத்தில் வில்லனாக நடித்து வருவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இருவரும் சேர்ந்து மிஸ்டர் பாரத் என்ற படத்தில் நடித்துள்ளனர். அதில் இருவருக்குமிடையே இருக்கும் என்னம்மா கண்ணு சௌக்கியமா பாடல் இன்றுவரை பிரபலமான பாடல். அதை ரீ கிரியேட் பண்ணும் மாதிரி கூலி படத்தில் லோகேஷ் எதுவும் வைத்திருப்பாரா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…