விஜய் அஜித் ஹீரோயின் இப்போ எனக்கு ஜோடி.. எப்படி நம்ம கெத்து? சத்யராஜ் கலாய்

மிரட்டல் வில்லன்: தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் வில்லனாக நடித்து அதன் பின் ஹீரோவாக பல படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியவர் சத்யராஜ். கடலோர கவிதைகள் படத்தில்தான் ஹீரோவாக அறிமுகமானார் சத்யராஜ். அதுவரை கமல் மற்றும் ரஜினியின் படங்களில் வில்லனாக நடித்து மக்களை மிரட்டி வந்தார். குறிப்பாக அந்த நூறு நாள்கள் படத்தில் மொட்டை தலையுடன் வில்லனாக நடித்தது இன்று வரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.
புது அத்தியாயம்: இவருடைய கெரியரில் எப்பவுமே ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் படங்களாக வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை போன்ற படங்களை சொல்லலாம். இந்தப் படம்தான் இவருக்கு ஒரு புதிய அத்தியாயத்தை கொடுத்தது. அதுவும் அமைதிப்படை படத்தில் வில்லனாக ஒரு பக்கம் நடித்திருந்தாலும் இன்னொரு பக்கம் ரொமாண்டிக் சீன்களில் அற்புதமாக நடித்திருப்பார் சத்யராஜ்.
கட்டப்பா காட்டிய வழி:சமீபகாலமாக குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வரும் சத்யராஜுக்கு பாகுபலி படம்தான் மற்றொரு அங்கீகாரத்தை கொடுத்தது என்று சொல்லலாம். கட்டப்பாவாக ஒரு செகண்ட் ஹீரோவாகவே பாகுபாலி படத்தில் நடித்திருப்பார் சத்யராஜ். அதிலிருந்தே எங்கு போனாலும் கட்டப்பா என்றேதான் சத்யராஜை அழைத்து வருகின்றனர்.கட்டப்பா கேரக்டர் அவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த நிலையில் நேற்று ஜெய், யோகிபாபு, சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் தயாராகியிருக்கும் பேபி அண்ட் பேபி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவிற்கு படத்தில் நடித்த அத்தனை பேரும் கலந்து கொண்டனர். அப்போது சத்யராஜ் பேசும் போது அஜித் மற்றும் விஜய்க்கு ஹீரோயினாக நடித்தவர் இப்போது எனக்கு ஹீரோயின் என மிகவும் சந்தோஷமாக சொல்லிக் கொண்டார்.
இது எனக்கு சந்தோஷம் என்றாலும் அவருக்கு எப்படி இருந்தது என எனக்கு தெரியவில்லை என அந்த நடிகையை பற்றி கூறினார். அவர் வேறு யாருமில்லை. நடிகை கீர்த்தனா. விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தின் ஹீரோயினே கீர்த்தனாதான். அதை போல அஜித்துடன் பவித்ரா மற்றும் ரெட்ட ஜடை வயசு படத்திலும் இவர்தான் ஹீரோயின்.