பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு…

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு…என்ற பாடலுக்கு ஏற்ப எந்த நம்பரை சொன்னாலும் சரி. நம்ம தமிழ்சினிமாவில் ஒரு படத்தைக் கண்டுபிடித்துவிடலாம். நம்பரில் படம் எடுப்பதற்கென்றே பல தயாரிப்பாளர்கள் ஆர்வமுடன் வந்தது போல தெரிகிறது. இது நியூமராலஜியாக கூட இருக்கலாம்.

இந்த நம்பிக்கை போல் படங்களும் வெற்றியாகவே அமைந்துள்ளன. இந்தப்படங்களின் வெற்றிகள் ரசிகர்கள் பார்க்கும்போதே தெரிந்து விடும். உங்களில் ஒருவராக இருந்து இந்தப் படங்களைப் பார்த்தால் போதும். படங்களை ரசித்துப் பார்க்கும்போது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். 

1 என்ற எண்ணில் என்னைப்போல் ஒருவன், ஆயிரத்தில் ஒருவன், எனக்குள் ஒருவன், ஒருவன், உன்னைப்போல் ஒருவன் படங்களும், 2 என்ற எண்ணில் இருவர், இருவர் உள்ளம், இருமலர்கள், ரெண்டு, ரெட்டை ஜடை வயசு ஆகிய படங்களும், 3 என்ற எண்ணில் மூன்று தெய்வங்கள், மூன்று முடிச்சு, மூன்றாம்பிறை, மூன்று முகம், மூணாறு, 3 ஆகிய படங்களும் வந்துள்ளன. 

அதே போல் 4 என்ற எண்ணில் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், நாலு வேலி நிலம் படங்களும், 5என்ற எண்ணில் பஞ்சதந்திரம், ஐந்து ஐந்து ஐந்து, ஐந்தாம் படை, ரெண்டும் ரெண்டும் அஞ்சு ஆகிய படங்களும், 6 என்ற எண்ணில் ஆறிலிருந்து அறுபது வரை, ஆறு ஆகிய படங்களும், 7 என்ற எண்ணில் அந்த 7 நாட்கள், ஏழாம் அறிவு ஆகிய படங்களும் வந்துள்ளன. 8 என்ற எண்ணில் எட்டு தோட்டாக்கள் என்ற படம் வந்துள்ளது. 

9 என்ற எண்ணில் நவராத்திரி, நவக்கிரகம், ஒன்பது ரூபா நோட்டு ஆகிய படங்களும், 10 என்ற எண்ணில் தசாவதாரம், பத்து எண்றதுக்குள்ள ஆகிய படங்களும், 13 என்ற எண்ணில் 13ம் நம்பர் வீடு என்ற திகில் படமும் வந்துள்ளது. 

அதற்கடுத்தபடியாக, 16 என்ற எண்ணில் சொந்தம் 16, 16 வயதினிலே, வருஷம் 16, துருவங்கள் 16 ஆகிய படங்கள் வந்துள்ளன. 18 என்ற எண்ணில் வழக்கு எண் 18ஃ9 என்ற படமும், 23 என்ற எண்ணில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படமும், 24 என்ற எண்ணில் 24 மணி நேரம், 24 ஆகிய படங்களும், 36 என்ற எண்ணில் 36 வயதினிலே படமும் வெளியாகியுள்ளன. 

40 என்ற எண்ணில் அலிபாபாவும் 40 திருடர்களும், 47 என்ற எண்ணில் 47 நாட்கள் படமும், 100 என்ற எண்ணில் நூற்றுக்கு நூறு, நூறாவது நாள் படமும், 1000 என்ற எண்ணில் 1000 தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களும் வெளி வந்துள்ளன. 

இவற்றிலிருந்து ஒரு சில படங்களை இங்கு பார்ப்போம். 

உன்னைப்போல் ஒருவன் 

 2009ல் வெளியான இப்படத்தை சக்ரி டொலெட்டி இயக்கினார். கமலஹாசன், எஸ்.சந்திரஹாசன் ஆகியோர் தயாரித்தனர். கதையை ரொனி ஸ்க்ரூவாலா, நீராஜ் பாண்டே, கமல்ஹாசன், ஈ.ஆர்.முருகன் ஆகியோர் எழுத, சுருதிஹாசன் இசையமைத்தார். கமல்ஹாசன், மோகன்லால், பாரத் ரெட்டி, லட்சுமி, கணேஷ், வெங்கட்ராமன், அனுஜா ஐயர், ஸ்ரீமன், சந்தானபாரதி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். 

இது 2008ல் வெளியான எ வெட்னஸ் டே என்ற இந்தி படத்தின் தழுவல். சராசரி மனிதனுக்கு சமுதாயத்தின் மேல் உள்ள கோபாவேசங்களைப் பற்றிய கதை. குறைந்த பட்ஜெட்டில் தயாரான இப்படம் வெற்றி பெற்றது. படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு வித்தியாசமானதாக இருக்கும். ஒரே மொட்டை மாடி, ஒரே சட்டை, பேண்ட் என படத்தை கூர்மையான வசனங்களால் தன்வசப்படுத்தியிருப்பார் கமல்.

அதேபோல் போலீஸ் அதிகாரியான மோகன்லால் கமலுக்கு இணையாக படத்தில் நடித்து அசத்தியிருப்பார். சுருதிஹாசன் இசையில் உன்னைப்போல் ஒருவன், நிலை வருமா, வானம் எல்லை…இல்லை, அல்லா ஜானே ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் உன்னைப்போல் ஒருவன் பாடலை சுருதிஹாசனுடன், அக்சராவும் இணைந்து பாடியிருப்பார்.

வானம் எல்லை இல்லை பாடலையும், அல்லா ஜானே பெண் குரலுக்கும் சுருதிஹாசனே பாடியிருப்பார். அதேபேர் நிலை வருமா பாடலையும், அல்லா ஜானே ஆண் குரலுக்குரிய பாடலையும் கமல்ஹாசன் பாடியிருப்பார். பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பும் ரகங்கள். 

ஆறிலிருந்து அறுபது வரை 

1979ல் வெளியான இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரஜினிகாந்த், படாபட், ஜெயலட்சுமி, சோ, ராமசாமி, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், சங்கீதா, எல்.ஐ.சி.நரசிம்மன், ஜெயா, சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. 

தந்தை தேங்காய் சீனிவாசன் திடீரென இறந்து விடவே மூத்த மகன் ரஜினிகாந்த் 2 தம்பிகள், தங்கைகயுடன் எப்படி வாழ்கிறார், எப்படி குடும்ப பாரத்தை சுமக்கிறார் என்பதே கதை. கண்மணியே காதல் என்பது, வாழ்க்கையே வேஷம், ஆண் பிள்ளை என்றாலும் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

இவற்றில் கண்மணியே காதல் என்பது பாடல் சிறந்த மெலோடி பாடல். இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் நீங்கள் காற்றில் மிதப்பதைப் போன்ற லேசான உணர்வைப் பெறுவீர்கள். 

16 வயதினிலே 

1977ல் வெளியான இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிப்பில் கலைமணி வசனம் எழுதினார். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் டாப் டக்கர். கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், காந்திமதி சத்யஜித், கவுண்டமணி, பாக்யராஜ், ஜெமினி ராஜேஸ்வரி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன் ஆகியோர் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றினர். முதன்முறையாக வெளிப்புறப்படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம். 

எஸ்.ஜானகி இந்தப்படத்தில் பாடிய செந்தூரப்பூவே பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதை பாரதிராஜா பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை கமல் ஹாசனும், சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை இளையராஜாவும் பெற்றுள்ளனர். தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் சிறந்த நடிகராக கமல்ஹாசனும், சிறப்பு விருது ஸ்ரீதேவிக்கும் கிடைத்தது.

 ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, சோளம் விதைக்கையில, மஞ்சக்குளிச்சு, செந்தூரப்பூவே, செவ்வந்தி பூ வெடுத்த பாடல்கள் இன்னிசை மழையில் நனைந்தது போல் உள்ளது. இப்படத்தில் கமல் சப்பாணியாக நடித்து அசத்தினார். 

அலிபாபாவும் 40 திருடர்களும் 

எஸ்.தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் இப்படம் 1955ல் வெளியானது. டி.ஆர்.சுந்தரம் இயக்கினார். எம்.ஜி.ஆர், பானுமதி, சாரங்கபாணி, பி.எஸ்.வீரப்பா உள்பட பலர் நடித்துள்ளனர். மாசிலா உண்மைக் காதலே, 
 
மாசிலா உண்மை காதலே, சின்னஞ்சிறு சிட்டே,  அழகான பொண்ணுதான்… உன்ன விட மாட்டேன்..நாமா ஆடுவதும், உல்லாச உலகம், சலாம் பாபு, அன்பினாலே ஆய்வு ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சலா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் ஹீரோ அலிபாபா. அவருடன் 40 திருடர்களும் சேர்ந்து வந்து ஒரு புதையலை எடுக்கத் திட்டம் தீட்டினர். இவரது திட்டம் பலித்ததா என்பதே மீதிக்கதை. 

ஆயிரம் ஜென்மங்கள்

1978ல் வெளியான இப்படத்தை துரை இயக்கினார். ரஜினிகாந்த், விஜயகுமார், லதா, பத்மபிரியா, வி.கே.ராமசாமி, மனோரமா, கே.கண்ணன், சுருளிராஜன், விஜயபாலா, வி.எஸ்.ராகவன், புஷ்பலதா உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு பயங்கர திகில் படம்.

வெண்மேகமே, கண்ணன் முகம் காணா, அழைக்கின்றேன், அறுபத்து நான்கு கலைகள், நான் ஆடாத ஆட்டமில்லை ஆகிய பாடல்கள் சூப்பர் ரகங்கள். 2019ல் எழில் இயக்கத்தில் இதே பெயரில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய த்ரில்லர் படம் வெளியாகி உள்ளது. 

Published by
adminram