குழந்தை பிறந்த பின் தனது புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா!

by adminram |

e5085e3c4c874b9ae28f87c8db6d2e6a-3

மும்பையை சேர்ந்த 24 வயதுப் பெண் சாயிஷா, நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி நடித்திருந்த 'அகில்' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இவருக்கு தொடர்ந்து ஹிந்தி, தமிழ் என வாய்ப்புகள் வரிசைகட்டி வந்தது.

அகில் படத்திற்கு பின் ஹிந்தியில் ஒரு படம் நடித்த அவர் பின்னர் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். இந்தப்படத்தில் நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் கலக்கியிருப்பார்.

191563ab7ccab6d94e6016af6f877be6-2
arya-sayyeshaa

இப்படத்திற்குப் பின்னர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் ஆகிய படங்களில் நடித்தார். இதில் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டார். இந்த காதல் கடந்த ஆண்டு திருமணத்தில் சென்று முடிந்தது.

ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்தபின் முதன்முறையாக தன்னுடைய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சாயிஷா.

e1e955ca9566228af7e813a3897f6d0e
sayyeshaa instagram

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், அழகாக இருக்கிறது என்றும், குழந்தை எப்படி இருக்கிறார் என்றும் நலம் விசாரித்து வருகின்றனர். அதிகமான லைக்குகளை பெற்றுள்ள இந்தப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகப்பேரால் பகிரப்பட்டு வருகிறது.

சாயிஷா நடிப்பில் கடைசியாக வெளியான டெடி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்சமயம் இவர் யுவரத்னா என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

sayyeshaa

Next Story