அவரும், அவரின் மனைவியும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இது இசை ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து தான் நலமாக இருப்பதாக ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டார்.
ஆனால், 2 நாட்களுக்கு முன்பு அவரின் உடல்நிலை மோசமானதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் இருப்பதாக கூறப்பட்டது. எனவே, இளையராஜா, பாரதிராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல பிரபங்கள் அவர் விரைவில் குணமடைந்து திரும்பவேண்டும் என பிரார்த்தனை செய்தனர். இசை ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர்.
தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பிவிடுவார் என அவரின் மகன் சரண் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
50 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் பல பாடல்களை பாடிய பாலசுப்பிரமணியம் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்’ என அதில் கூறியுள்ளார்.
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…