More

எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. மருத்துவர்கள் தகவல்…

இவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், பின்னடைவு அடைந்திருப்பதாகவும் மாறிமாறி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.. அவர் விரைவில் நலமடைய வேண்டும் என திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஏற்கனவே இசைஞானி இளையராஜா ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டிருந்த நிலையில், சமீபத்தில் பாரதிராஜாவும் கண்ணீர் ததும்ப பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

மேலும், எஸ்.பி.பி.சார் விரைவில் குணமடைய வேண்டும் என நாளை மாலை 6மணி முதல் 6.5 வரை 5 நிமிடம் நாம் அனைவரும் ஒன்றாக பிரார்த்தனை செய்வோம்’ என நடிகர் கார்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், எஸ்.பி.பியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.    வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவ வல்லுநர் குழு தொடர்ந்து அவருக்கு சிறப்பான சிகிச்சையை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts