ரசிகர்களை ஏமாற்றிய இரண்டாம் பாதி – தர்பார் கடை தேறுமா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து இன்று வெளியான திரைப்படம் தர்பார். நீண்ட வருடங்களுக்கு பின் ரஜினி போலீஸ் வேடம் ஏற்றிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

படத்தின் முதல் பாதியில் திரைக்கதை, சண்டைக்காட்சிகள், அனிருத்தின் பிண்ணனி இசை, இடைவேளை காட்சி, ரஜினியின் ஸ்டைல் கலந்த அதிரடி காட்சிகள் மற்றும் யோகிபாபுவின் நகைச்சுவை காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களை கட்டிப்போட்டது.

அதேநேரம், இடைவேளைக்கு பின் படம் சற்று தொய்வடைந்து விட்டதாகவும், முதல் பாதி அளவுக்கு 2ம் பாதியில் திரைக்கதை வேகம் எடுக்காததால் ரசிகர்கள் பலரும் தூங்கிவிட்டதாக கூறும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. 

அதேநேரம், ரஜினியின் தீவிர ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தை கொடுக்கவில்லை. படத்தில் ரஜினியின் ஸ்டைல் மற்றும் மாஸான காட்சிகள் மிகவும் பிடித்திருப்பதாக அவர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

Published by
adminram