பெட்ரோல் பங்க் துணி மாற்றும் ரூமில் ரகசிய கேமரா – 3 ஆண்கள் செய்த கொடூரம் !

கோவையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெண்கள் துணி மாற்றும் அறையில் செல்போன் மூலம் ரகசிய கேமரா வைக்கப்பட்டு அவர்கள் துணி மாற்றுவதை வீடியோ எடுத்து பரப்பிய மூன்று பேர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வேலைப்பார்க்கும் பெண்கள் துணி மாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் ரகசியமாக தனது மொபைல் கேமராவை பொறுத்தி வீடியோ எடுத்துள்ளார் அதே பங்கில் பணிபுரிந்த சுபாஷ்.

இதையறிந்த அந்த பெண்கள் இதுகுறித்து நிறுவனத்திடம் புகார் கொடுக்க சுபாஷிடம் இருந்த வீடியோக்களை அழித்து அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து 6 மாதம் முடிந்த நிலையில் இப்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ சம்மந்தப்பட்ட பெண்கள் அதிர்ச்சியாகி போலீஸில் புகாரளித்துள்ளனர்.

இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் சுபாஷிடம் வீடியோக்களை வாங்கி அழித்த மணிகண்டன் என்பவர் அவற்றை செல்போனில் சேமித்து வைத்து பின்னர் தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பியதாகவும் அதன் பின்னர் அவர் இணையதளத்தில் பகிர்ந்ததாகவும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Published by
adminram