1. Home
  2. Cinema News

ராயன் படம் முழுக்க உர்ருன்னு இருந்த தனுஷா இப்படி?... ஷூட்டிங்கில கூட ஹீரோயினை தொடலையே!..

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ராயன் படத்தின் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷின் 41-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தனுஷின் 41-வது பிறந்தநாளை முன்னிட்டு ராயன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை அந்த படம் ஈட்டி உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், இதுவரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வசூல் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மிகப்பெரிய ஓப்பனிங் என்று மட்டுமே அறிவித்துள்ளது.


தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள ராயன் மேக்கிங் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ராயன் படத்தில் ரசிகர்களை கொஞ்சம் சிரிக்கவும் கலகலப்பாகவும் வைத்த காட்சிகள் என்றால் அது சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்த வாட்டர் பாக்கெட் பாடல் தான்.

ராயன் படம் முழுக்க உர்ருன்னு மூஞ்சியை வைத்துக்கொண்டு எதிரிகளை கொலைவெறியுடன் குத்திக் கொல்லும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருப்பார். ஆனால், இயக்குனர் தனுஷ் வாட்டர் பாக்கெட் பாடலின் போது எந்த அளவுக்கு ஜாலியாக ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக் கொடுத்து நடிக்கிறார் என்பதை இந்த வீடியோ வெளிக்காட்டுகிறது.

அபர்ணா பாலமுரளியை ஃபாலோ பண்ணிக்கொண்டு சந்தீப் கிஷன் போவதை கூட தனுஷ் நடந்து காட்டி சொல்லிக்கொடுக்கிறார். அபர்ணா பாலமுரளி தூக்கிக்கொண்டு செல்லும் காட்சிக்கு சொல்லிக் கொடுக்கும் தனுஷ் அசிஸ்டண்ட் டைரக்டரை தூக்கிக் கொண்டு சொல்லிக் கொடுப்பதை பார்த்த ரசிகர்கள் ஷூட்டிங்கில் கூட எந்த ஹீரோயினையும் தனுஷ் தொடவில்லை போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தனுஷுக்கு இந்த படத்தில் ஹீரோயினே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடித்த கேப்டன் மில்லர் படத்திலும் அவருக்கு ஹீரோயின் கிடையாது. பிரியங்கா மோகனை காதலிப்பது போல காட்டினாலும், அவர் இன்னொருவரின் மனைவியாகி விடுவார். தனுஷின் இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..

https://www.youtube.com/watch?v=m5ls_jYgpBY


கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.