விஜய் போன விழாவுக்கு என்னையும் அழைச்சாங்க… சீமானின் பேச்சால் காமெடி பண்ணும் ரசிகர்கள்!..
Vijay: நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திய பின்னர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தொடர்ச்சியாக நடிகர் விஜய் குறித்து பேசிக்கொண்டிருப்பது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தொடர்ச்சியாக விஜயை குறித்து பேசிக் கொண்டிருப்பதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டது குறித்து சீமான் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
நேற்று நடந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் தலைவராக முதல்முறையாக கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சியாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சுகள் வைரலாகி வருகிறது.
அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் நாம் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்ளாதது குறித்து விஜய் பேசியதும் அரசியல் களத்தில் தற்போது அனலை கிளப்பி விட்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க மீண்டும் சீமான் இந்த நிகழ்ச்சி குறித்து பேசி இருக்கிறார்.
விகடன் நடத்திய எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரையும் அழைத்ததாக கூறப்படுகிறது. மேலும், அம்பேத்கர் நூலை திருமாவளவன் வெளியீட்டு நான் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனவும் சீமான் பேசி இருக்கிறார்.
சீமானின் இந்த பேச்சை விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தவெக உங்களை கண்டுகொள்ளாத போது தொடர்ச்சியாக நீங்கள் அவர்களை சீண்டி கொண்டிருப்பது எப்படி சரியாகும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.