ஒரு நாளில் முதல்வர் ஆக உங்களுக்கு ஆசையா?.. விஜய் பற்றி சீமான் கொடுத்த பரபரப்பு பேட்டி.....

by adminram |

a222a11669a94e9e4358eb0a1a6842ea-4

இயக்குனராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் சீமான். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 6 சதவீத வாக்குகளை பெற்றார். இவருக்கென தனி அபிமானிகள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் ‘ வரவேண்டாம் என நான் கூறவில்லை. ஆனால், தம்பி சூர்யாவைப் போல் விஜயும் மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டும். திடீரென்று கட்சி துவங்கி தலைவராவது கடினம், ரசிகர்கள் மட்டுமே வாக்கு செலுத்தி ஒருவர் நாடாள முடியாது என்பது என் கருத்து’ என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், விஜயின் சொகுசு கார் விவகாரத்தில் அவரை பலரும் கடுமையாக விமர்சித்த போது சீமான் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story