More

டி20 நைட் வாட்ச்மேனா?… அமீர்கான் கெட்டப்பில் கோலியை கேலி செய்த சேவாக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டிவில்லியர்ஸை 6ஆவது இடத்தில் இறக்கியது குறித்து சேவாக் கோலியைக் கேலி செய்துள்ளார்.

Advertising
Advertising

பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி கேப்டன் கோலி டிவில்லியர்ஸை 6 ஆவதாக கோலி இறக்கியது மிகப் பெரிய தவறான முடிவாக மாறியது. அவருக்கு முன்னால் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷிவம் துபே ஆகியோரை இறக்கியது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் கோலியின் இந்த முடிவை பலரும் விமர்சித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்கும் தன் பங்குக்கு கேலி செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பிகே பட அமீர்கான் கெட்டப்பில் தோன்றிய அவர் ஏலியன் போல ‘டி 20 யில் நைட் வாச்மேனா? நான் அதை இப்போதுதான் கேள்வி படுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts