பீஸ்ட் திரைப்படத்தில் செல்வராகவன் - மிரட்டல் வில்லனா?....

by adminram |

5e14be7ab0be3a58502283b0d4729125

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. அதன்பின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதில், விஜய் - பூஜா ஹெக்டே இடையேயான பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்டது. அடுத்த கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. அங்கு பரபர ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. எனவே, விரைவில் படக்குழு ரஷ்யா பறக்கவுள்ளது. 2022 கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட வேண்டும் என படக்குழு வேகமாக இயங்கி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளர் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

Next Story