அந்த டைட்டில் நல்லால தம்பி!.. மாத்திடுங்க… பெயர் மாறும் செல்வராகவன் – தனுஷ் படம்….

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய 2 படங்களும் தனுஷ் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது. அடுத்து இருவரும் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் 2  திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.  இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், அது ஆயிரத்தில் ஒருவன் 2 இல்லை எனவும் கூறினர். 

எனவே, இருவரின் கூட்டணியை ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அப்படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படாமல் இருந்தது. தனுஷும் தொடர்ந்து வெவ்வேறு இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிக் கொண்டே இருந்ததால் செல்வராகவன் – தனுஷ் இணையும் திரைப்படம் எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.

இந்நிலையில், செல்வராகவன் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்டு மாதம் 20ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படத்தை செல்வராகவன் சில நாட்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இப்படத்திற்கு ‘நானே வருவேன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.

ஆனால், இப்படத்தின் தலைப்பு பவர் புல்லாக இல்ல எனவும், வேறு தலைப்பை வைக்க்குமாறும் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு செல்வராகவனிடம் கூறியுள்ளாராம். எனவே, ‘நானே வருவேன்’ என்கிற தலைப்பு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram