More

மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி – ஒரே போஸ்ட்டில் தெறிக்கவிட்ட செல்வராகவன்

தமிழ் சினிமாவில் செல்வராகவன் – தனுஷ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்த திரைப்படங்களில் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதை கூறவே தேவையில்லை. இளசுகளின் செல்போன் ரிங் டோனாக அந்த பாடல்கள் இப்போதும் இருக்கிறது. இவர்களின் கூட்டணியில் வெளிவந்த காதல் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை,மயக்கம் என்ன ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை செல்வராகவன் – யுவன் கூட்டணியில் 7 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், செல்வராகவனின் அடுத்த படத்திலும் யுவன் சங்கர் ராஜா இசைதானாம். இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படத்தை செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ 8வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைவது பெரிய மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். எனவே, நீண்ட வருடங்களுக்கு பின் செல்வராதனுஷ் -தனுஷ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி அமைந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts