
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற அசத்தலான திரைப்படங்களை இயக்கியவர் செல்வாகவன். அதன்பின் அவர் இயக்கிய திரைப்படங்கள் பெரிய கவனத்தை பெறவில்லை. தற்போது தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
ஒருபக்கம் செல்வராகவன் ஒரு நடிகராகவும் மாறியுள்ளார். சாணிக்காயிதம் என்கிற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் மிரட்டலான வேடத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர்கள் திரைத்துறையில் வரவேற்பை பெற்றது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இப்படம் தொடர்பாக செல்வராகவனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.






