Connect with us

பொய் சொன்னது தப்பாப் போச்சு!…‘ஆயிரத்தில் ஒருவன்’ ரகசியம் உடைத்த செல்வராகவன்…

பொய் சொன்னது தப்பாப் போச்சு!…‘ஆயிரத்தில் ஒருவன்’ ரகசியம் உடைத்த செல்வராகவன்…

பொய் சொன்னது தப்பாப் போச்சு!…‘ஆயிரத்தில் ஒருவன்’ ரகசியம் உடைத்த செல்வராகவன்…

812df07d9ff5c0cdd3338506c184e342-3

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி என கவனம் ஈர்த்தவர் செல்வராகவன். அவர் திரைப்படம் இயக்க துவங்கிய நேரத்தில் திறமையான இளம் இயக்குனராக கருதப்பட்டார். பத்திரிக்கைகள் அவரை பாராட்டி எழுதியது. கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் ஆகியோர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மேக்கிங்கில் கலக்கியிருந்தார் செல்வராகவன். இப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை பார்த்து  ‘ஸ்டன்னிங் இயக்குனர்’ என அவருக்கு பட்டம் கொடுத்தார் மணிரத்னம்.

5cd361f1c66bc49b021d361420076615

அதன்பின் செல்வராகவன் இயக்கிய சில திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. அடுத்து தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். இப்படம் திரையுலகிலும், ரசிகர்களிடமும் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் திரைப்படங்களிலும் நடிக்கவும் துவங்கியுள்ளார் செல்வராகவன்.

f07312cadf0cdb23ad964d98778950ee

இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் பற்றிய ஒரு முக்கிய தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளர் ‘ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் உண்மையான பட்ஜெட் ரூ.18 கோடிதான். ஆனால், இது மெகா பட்ஜெட் படம் என்கிற இமேஜை உருவாக்க இப்படத்தின் பட்ஜெட் ரூ.32 கோடி என நாங்களே அறிவித்தோம். என்ன ஒரு முட்டாள்தனம்!. படம் வெளியாகி ரூ.18 கோடியை இப்படம் சம்பாதித்து கொடுத்தும், இப்படம் ஆவரேஜ் வசூல் என பலரும் பேசினர். எனவே, இனிமேல் விளம்பரத்திற்காக பொய் சொல்லக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்’ என வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.

 

Continue Reading
To Top