இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு 1100 ஐ நெருங்கியுள்ளது. சமூக தொற்று எனப்படும் நான்காம் கட்ட பரவலுக்கு செல்லாமல் தடுக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநில அரசு இதற்காக ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.
கொரோனா தொற்று இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வீடுகளுக்குள் இருக்காமல் வெளியே சென்று சுற்றுவதாக செய்திகள் வெளியாகவே அதுபோல தனிமைப் படுத்தப்பட்டவர்கள் ஒவ்வொரு மணிநேரமும் செல்பி எடுத்து அதை அந்த செயலியில் பதிவேற்ற வேண்டும். அந்த செயலியில் ஜிபிஎஸ் வசதி இருப்பதால் அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இருப்பிடத்தை அது கண்டுபிடித்துக்கொள்ளும். தூங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் இதுபோல செல்பி எடுத்து அனுப்பவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Biggboss Tamil:…
Game Changer:…
OTT Tamil:…
விஜய் சேதுபதி…
தமிழில் நல்ல…