More

எங்களை நோயாளிகளிடம் நிர்வாணமாக அனுப்புகிறார்கள் – போரட்டத்தில் இறங்கிய மருத்துவ பணியாளர்கள்!

கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரான்சில் 82,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,507 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertising
Advertising

இதுகுறித்து அங்குள்ள மருத்துவப்பணியாளர்கள் தங்களை, நோயாளிகளிடம் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நிர்வாணமாக அனுப்புவதாகக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். இதையடுத்து அரசுக்கு எதிராக போராடும் விதமாக தங்கள் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

 #aPoilcontrelecovid (கொரோனாவுக்கு எதிராக நிர்வாணமாக) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts