’சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்: ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?

இந்த நிலையில் திடீரென ’சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று ஏற்கனவே 5 திரைப்படங்கள் வெளியாவதால் தற்போது மீண்டும் ’சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி பிப்ரவரி 21ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியிலாவது இந்த படம் ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் அதிருப்தியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்

சந்தானம், வைபவி, கிரண் ரத்தோட், ராதாரவி, மயில்சாமி, சினேகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆனந்த் பால்கி என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் மதி ஒளிப்பதிவில் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

Published by
adminram