மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு பாலியல் தொல்லை ! சிக்கிய ஓரினச்சேர்க்கையாளர் !!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவருக்கு ஓரினச்சேர்க்கை தொல்லைக் கொடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் உள்ள குவாரி ஒன்றில் வடமாநிலத்தைச் சேர்ந்த தனுஷ் பட்டேல் என்ற இளைஞர் வேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை தனியாக பைக்கில் அழைத்துச் செல்வதை அங்குள்ள சிலர் பார்த்துள்ளனர்.

அதனால் சந்தேகப்பட்டு அவரை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது, தனுஷ் அந்த  மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வைத்துள்ளார். இதையடுத்து அவரைப் பிடித்து போலிஸில் ஒப்படைத்துள்ளனர் அந்த ஊர் மக்கள். இதையடுத்து அவரைப் போலிஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Published by
adminram