More

கொரோனாவை வரவேற்ற கவர்ச்சி நடிகை – நெட்டிசன்கள் கண்டனம் !

கொரோனா இந்தியாவுக்குள் பரவியதை அடுத்து அதற்கு வாழ்த்துகள் சொன்ன் தெலுங்கு நடிகை சார்மிக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

சிம்பு முதல் முதலாக ஹீரோவாக அறிமுகமான காதல் அழிவதில்லை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சார்மி. தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் தெலுங்கில் கதாநாயகியாகவும் கவர்ச்சி நடிகையாகவும் பிரபலமானார். இப்போது சில காலமாக நடிப்பை விட்டு விலகி தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் தற்போது விஜய் தேவாரகொண்டா நடிக்கும் பைட்டர் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் பதிவு செய்த ஒரு டிவிட்டால் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘கொரோனா இந்தியாவில் பரவி விட்டது…. வாழ்த்துகள்’ எனத் தெரிவித்திருந்தார். அவரின் இந்த பொறுப்பற்ற டிவிட்டால் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சீனாவில் கடந்த அண்டு டிசம்பர் மாதம் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது 25 நாடுகளில் பரவியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலால் 3000 பேர் இறந்துள்ளனர். 80,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Published by
adminram

Recent Posts