வரலட்சுமி திருமணத்தின் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா... இத்தனை கோடியா!

by ராம் சுதன் |

சமீபத்தில் நடந்து முடிந்த ஸ்டார் திருமணம் சோசியல் மீடியாவில் பெரிய டிரெண்டாக இருந்தது. அது சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம் தான். இந்தத் திருமணத்திற்கு கிட்டத்தட்ட 80 முதல் 85 கோடி வரை செலவாகி உள்ளதாம். திருமணத்திற்கு முன்பு சாதாரண ஆர்டிஸ்ட்ல தொடங்கி பாரதப் பிரதமர் மோடி வரைக்கும் பத்திரிகை வைத்தார்களாம். சரத்குமாரின் இல்லத்தில் முதல் திருமணம். அதனால் அவருக்கு மகிழ்ச்சி. சினிமாவுக்கு வரலட்சுமி வந்ததே சரத்குமாருக்குப் பிடிக்கவில்லையாம்.

திருமணம் சார்ந்த மொத்த செலவும் நிக்கோலை தான். அமெரிக்க டாலரில் 10 மில்லியன் நெட்வொர்க் இருக்குதாம். 900 கோடி மதிப்பு இருக்கும். 1979ல் இருந்து 7ன்னு மும்பைல மிகப்பெரிய ஆர்ட் கேலரி இருக்குதாம். மாதத்திற்கு 2 ஓவியம் விற்றால் போதுமாம். காலை ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம் என்கிறார் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு. அவர் மேலும் என்னென்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...

சமீபத்தில் வரலட்சுமிக்கும் பிரபல தொழில் அதிபர் நிக்கோலைக்கும் திருமணம்.பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. வரலட்சுமி கல்யாணத்துக்கு செலவுகள் நிறைய ஆகிவிட்டதாம். சென்னையில் 7 ஸ்டார் ஓட்டலுக்கு வரும் பிரபலங்களுக்குக் கார் அனுப்பி வரவேற்றார்களாம். அதுவும் விதவிதமான வெளிமாநில கார்கள் அணிவகுத்து நின்றதாம்.ஓட்டலுக்கு அழைத்து வருவதும், அங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் செல்வதும் என இவ்வளவு கார்கள் எங்கிருந்து வந்தன என ஆச்சரியப்பட்டார்களாம். அதையும் தாண்டி சாப்பாடு பெரிய செலவு. அந்த ஓட்டலில் குறைந்தபட்சம் சாப்பாடே ஒரு பிளேட் 3000 ரூபாயாம்.

அதுவும் இதுபோன்ற கல்யாண விருந்து என்றால் வெளிமாநில உணவுகள் எல்லாம் வருமாம். அப்படிப் பார்க்கும்போது ஒரு பிளேட் சாப்பாடே 6000 முதல் 6500 ரூபாயாம். இதுல நல்ல விஷயம் ஒன்று கேள்விப்பட்டேன். மீந்து போன உணவுகளை ஆதரவற்ற இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். வரலட்சுமி சிவசக்தின்னு ஒரு அமைப்பை வைத்துள்ளார்களாம்.

அவர் சொன்னது என்னன்னா, என்னுடைய திருமணத்தில் மீந்து போன உணவுகளை முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு அனுப்ப வேண்டாம். அதற்குப் பதிலாக இதே ஸ்டார் ஓட்டல்ல அவங்களுக்கும் சுடச்சுட உணவுகளைத் தயாரித்து அனுப்ப வேண்டும் என்று சொன்னாராம். அதன்படி அப்படியே சில அமைப்புகளுக்கும் அனுப்பினார்களாம். இது வரவேற்கத் தக்க விஷயம். பெரிய புண்ணியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story