கதையில் ஆர்வம் காட்டாத ஷாருக் – அப்செட்டில் அட்லி செய்யும் வேலை!

அட்லி சொன்னக் கதை முழுமையாக ஷாருக் கானுக்குப் பிடிக்காததால் அடுத்த கட்ட வேளைகளில் பிஸியாகியுள்ளார் அவர்.

அட்லி தமிழ் சினிமாவில் அடைந்த வளர்ச்சி அனைவரையும் ஆச்சர்யப் பட வைக்கக் கூடியது. இந்நிலையில் பிகில் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் அடுத்ததாக ஷாருக் கானை வைத்து படம் இயக்கப்போவதாக பேச்சுகள் எழவே, பாலிவுட் பரபரப்பானது.

ஏனென்றால் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் ஷாருக் 2 வருடங்களாக எந்தப் படமும் ஒத்துக்கொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில் அட்லி சொன்ன கதை முழுவதுமாக பிடிக்காமல் அதை பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகரிடம் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது அவரது குழுவுடன் அட்லி தனது மெருகேற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram