More

குக் வித் கோமாளி அஷ்வின் பற்றி ஷகிலா மகள் போட்ட நெகிழ்ச்சி பதிவு…. உருகும் ரசிகர்கள்…

90களில் கேரளாவில் வெளியான ஆபாச படங்களில் நடித்தவர் ஷகிலா. இவரின் படங்களுக்கு கூடிய கூட்டத்தால் மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கே வசூல் குறைந்தது. எனவே, மலையாள திரையுலகம் அவரை நடிக்கவிடாமல் தடுத்தது. எனவே, தமிழகம் வந்து செட்டில் ஆனார் ஷகிலா. அதன்பின் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். 

Advertising
Advertising

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமாகியுள்ளார். மேலும், ரசிகர்களுக்கு அவர் மீதுள்ள இமேஜ் மாறி அவரை ‘அம்மா’ என அழைக்க துவங்கியுள்ளனர். அதோடு, விதவிதமான சமையலை செய்து கலக்கி வருகிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு மில்லா என்கிற திருநங்கையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சமீபத்தில்தான் மகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.இதைக்கண்ட நெட்டிசன்கள் தங்கள் மகிழ்ச்சிகளையும், அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில், மில்லா தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்து ‘ மற்றொரு தாயின் சகோதரர்’ என பதிவிட்டுள்ளார். மில்லா மாடலாகவும், பேஷன் டிசைனராகவும் உள்ளார்.

அவரின் புகைப்படங்களை பார்க்க விரும்புவோர் கீழ் கண்ட அவரின் இன்ஸ்டாகிராம் லிங்கை க்ளிக் செய்யவும்…

 

Published by
adminram

Recent Posts