நடிக்க வந்துவிட்டார் ஷங்கர்?.. அதுவும் இந்தப் படத்திலா..?

by adminram |

e934a9a1e91f943c4baa0ada1a280947

பிரமாண்ட இயக்குனர் என்றவுடன் ரசிகர்களுக்கு டக்கென நினைவிற்கு வருவது இயக்குனர் ஷங்கர்தான். அந்த அளவிற்கு இவர் படங்களில் காட்சிகள் மிக பிரமாண்டமாக இருக்கும். ரோடு, ட்ரெயின், வீடு, மலை, துணை நடிகர்களின் வயிற்றுக்குக்கூட பெயிண்ட் அடித்து ஒவ்வொரு காட்சியையும் தத்ரூபமாக படமாக்குபவர் ஷங்கர்.

ஷங்கர் இயக்கத்தில் கமல், மனிஷா கொய்ராலா நடிப்பில் 1996ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் 'இந்தியன்'. இப்படத்தில் கமல் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து மிரட்டியிருப்பார். இதில் கிளைமேக்ஸ் காட்சியில் மகனை கொன்றுவிட்டு அப்பா கமல் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதுபோல் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதையடுத்து அப்போதே, இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், 24 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு கமலை வைத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் ஷங்கர். படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டதால் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சாரணை வைத்து நேரடி தெலுங்கு படத்தை இயக்க சென்றுவிட்டார் ஷங்கர். இப்படத்தில் நாயகியாக ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். பான் இந்தியா உருவாகிவரும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியது.

bd5623e95b363d25f4ea45e05494f814

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். அதில் ராம் சரண், கியாரா அத்வானி, ஷங்கர், மலையாள நடிகர் ஜெயராம் ஆகியோர் நடந்து வருவதுபோல் உள்ளது. இதனால் ஷங்கரும் இப்படத்தில் நடிக்கிறாரா என ஒரு சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவர் முழு படத்திலும் நடிக்கிறாரா அல்லது கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா என தெரியவில்லை. நடிகராக வேண்டும் என்ற கனவோடு சினிமாவில் நுழைந்தவர் ஷங்கர். ஆரம்ப காலத்தில் சிறு சிறு ரோலில் சில படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story