இந்தியன் 2 டிரைலரை பார்த்து ஏமாந்துறாதீங்க!.. ஷங்கர் உதவி இயக்குனர் சொல்றதை கேளுங்க!..

இந்தியன் 2 படத்தில் ஏகப்பட்ட விஷயங்களையும் மிகப்பெரிய கதையையும் இயக்குநர் ஷங்கர் வைத்திருக்கிறார். ஆனால், அதையெல்லாம் 2 நிமிட டிரைலரில் காட்ட முடியாது. படத்தின் ஆரம்பம், முக்கிய கருத்து மற்றும் கிளைமேக்ஸ் ஸ்டன்ட் மட்டுமே டிரைலரில் காட்டியுள்ளார்.

ஆனால், இந்தியன் 2 படத்தில் அதைவிட பல விஷயங்கள் உள்ளன. ஷங்கருக்கே படம் இயக்கத் தெரியவில்லை என சோஷியல் மீடியாவில் கலாய்ப்பவர்கள் தான் முதல் நாளிலேயே படத்தை தியேட்டருக்கு சென்று பார்ப்பார்கள்.

ஷங்கர் யார் என்பது இந்தியன் 2 படம் வெளியானதுமே தமிழ் சினிமா ரசிகர்கள் தெரிந்துக் கொள்வார்கள். 2.0 படத்துக்குப் பிறகு 7 ஆண்டுகள் கழித்து ஷங்கர் படம் வெளியாகவுள்ள நிலையில், தியேட்டர்கள் எல்லாம் திருவிழா கோலம் காணும் என ஷங்கரின் உதவி இயக்குனர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

பேஸ்புக் மூலம் இந்தியன் தாத்தா வருகிறார் எனக் காட்டுவதே ஓல்டு ஃபேஷன் என ட்ரோல் செய்கின்றனர். அந்த படம் எடுக்க ஆரம்பித்து, 6 வருடங்கள் ஆகி விட்டன. சோஷியல் மீடியா என்று தான் ரசிகர்கள் பொதுவாக புரிந்துக் கொள்ள வேண்டும். இன்றும் பல இளைஞர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தித்தான் வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

ஷங்கர் வெறும் காட்சிக்கு சும்மாவே கலர் அடித்து பிரம்மாண்டம் செய்யும் நபர் இல்லை. ஒரு காட்சியை எந்தளவுக்கு விசாலமான பார்வையில் பார்க்கிறார் என்பது படத்தில் பணியாற்றும் டெக்னீஷீயன்களுக்குத்தான் தெரியும்.

கமல்ஹாசன் இந்த வயதிலும் இவ்வளவு ரிஸ்க் எடுத்து உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். அவர் மெனக்கெடும் அளவுக்கு எல்லாம் இன்றைய இளைஞர்கள் எல்லாம் 3 மணி நேரம் மேக்கப் போட்டுக் கொண்டு பொறுமையாக உட்கார மாட்டார்கள். 3 மணி நேரம் படத்தையே பார்க்க முடியவில்லை என புலம்புபவர்களால் வாழ்க்கையில் எதையுமே கற்றுக் கொள்ள முடியாது என்றார்.

Related Articles
Next Story
Share it