ஷங்கரின் புதிய படத்தில் சுய இன்ப நடிகை… வைரல் புகைப்படங்கள்….

Published on: July 31, 2021
---Advertisement---

7e648e946fb9b7464908975ca216472a-2

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர். ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ், காதலன், முதல்வன், அந்நியன், சிவாஜி, ஐ, எந்திரன் என அவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. சமூக கருத்தை கிராபிக்ஸ் கலந்து பேண்டஸி திரைப்படமாக கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரே..

ஆனால், இந்தியன் 2 திரைப்படத்தை எப்போது கையில் எடுத்தாரோ அப்போது அவருக்கு பிடித்ததது சனி.. படம் துவங்கி சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. அதன்பின், கமல்ஹாசன் – லைகா இடையே பஞ்சாயத்து, படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் மரணம், கொரோனா பரவலால் படப்பிடிப்புக்கு தடை, லைக்காவுக்கும், ஷங்கருக்கும் இடையே பஞ்சாயத்து என படம் துவங்கி இரண்டரை வருடங்களாக படம் முடங்கிக் கிடக்கிறது.

405f56d091144c813915ec7e0f996bf2

படத்தை துவங்குவது குறித்து எதுவும் கூறாமல் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அமைதியாக இருந்ததால், பொறுத்து பொறுத்து பார்த்த ஷங்கர் ‘இந்தியன் 2’- வை விட்டுவிட்டு தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படமும், அதன்பின் பாலிவுட்டில் அந்நியன் 2 – படத்தை ரீமேக் செய்வதாகவும் அறிவித்தார். இதைத்தொடர்ந்து இந்தியன் 2 -வை முடிக்காமல் வேறு படங்களை இயக்க செல்ல ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், ஷங்கருக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வெளியாகிவிட்டதால், தெலுங்கில் ராம்சரணை இயக்கும் பணியில் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். இப்படத்திற்கு பிரபல தெலுங்கு பட இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளது தெரியவந்துள்ளது. இவர் பாய்ஸ் படத்தில் நான்கு இளைஞர்களில் ஒருவராக, நடிகராக ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.

fd81fdd1ad4b6fbfc3d49d41da0cf5af

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளார். இவர் லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண் வேடத்தில் நடித்தவர். திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் பற்றி ஷங்கர் அவரிடம் விவரிக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

4846eef38dc6afc7653d45ecd7afb746

 

Leave a Comment