’இந்தியன் 2’ கெட்டப்பை கசியவிட்ட காஜலுக்கு ஷங்கர் பாராட்டு

இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியன் 2’ படத்தில் தனது கெட்டப் குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுவாக ஷங்கர் படத்தில் புகைப்படம் வெளியே கசிய கூடாது என்பதில் கவனமாக இருப்பவர். ஆனால் காஜல் அகர்வால் தைரியமாக இந்த புகைப்படத்தை வெளியிட்டது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

ஆனால் இந்த புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வாலுக்கு ஷங்கர் பாராட்டு தெரிவித்து உள்ளதாக தெரிகிறது. ஏனெனில் காஜல் வெளியிட்ட புகைப்படத்தில் காஜலின் முகம் தெரியவில்லை என்பதும் காஜல் அகர்வால் பாதி தோற்றம் மட்டுமே அந்த புகைப்படத்தில் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஜல் அகர்வால் இந்த படத்தில் சேனாதிபதி என்ற கமல் கேரக்டருக்கு ஜோடியாக வயதான கேரக்டரில் நடித்து வருவதால் அவரது முகம் தெரியாத இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் பெரும் எதிரார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram