ஷங்கர் - ராம்சரண் படத்தில் அந்த நடிகை? - கசிந்த தகவல்

by adminram |

947a60ccba5f61542d54c73414f42ef6

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர்.இந்தியன் 2 திரைப்படம் தொடர்பான வழக்கில் ஷங்கருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

fd81fdd1ad4b6fbfc3d49d41da0cf5af-2

இது அரசியல் பரபர ஆக்‌ஷன் கதையாகும். இப்படத்தில் ராம்சரண் முதலமைச்சராக நடிக்கவுள்ளார். அதோடு, இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ஒரு கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ddf7034d0123750a9d4dea23c452ce7f

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் அரசியல் ஆக்‌ஷன் கதையை மையமாக கொண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story