பல பஞ்சாயத்துகள்!...ஆனாலும் படப்பிடிப்புக்கு தேதி குறித்த ஷங்கர்....பரபர அப்டேட்

by adminram |

d9719e299fcec8850489654c5d28b5b7-3

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். ஆனால், இவர் இயக்கும் திரைப்படங்களின் கதை தன்னுடையது எனவும், அதை ஷங்கர் திருடிவிட்டார் எனவும் சிலர் அவ்வப்போது வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருவது வழக்கமாகிவிட்டது. இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என ஒருவர் தொடர்ந்து வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

அதன்பின் அவர் தனது அந்நியன் படத்தை பாலிவுட்டில் எடுக்க நினைத்தபோது அந்த கதைக்கு தயாரிப்பாளர் என்கிற வகையில் அப்படத்தின் ரீமேக் உரிமை எனக்கே சொந்தம் என அந்நியன் பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நீதிமன்றம் மூலம் ஷங்கருக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.

76165d7d29b65f435d25c1d0ab902a2c

தற்போது ஷங்கர் ராம்சரனை வைத்து தெலுங்கு, தமிழில் உருவாகும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். அதற்குள் இப்படம் கதை திருட்டு பஞ்சாயத்தில் சிக்கியுள்ளது. இப்படத்திற்கான ஒரு வரிக்கதையை இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜிடம் இருந்து பெற்றார் ஷங்கர். அந்த கதைதான் தற்போது டெவலப் செய்யப்பட்டு வருகிறது. இது அரசியல் ஆக்‌ஷன் திரைப்படமாகும்.

464e66b828b8d1eaa456c01b07c52f36
shankar

கார்த்திக் சுப்பாராஜின் உதவியாளர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் ஷங்கர் இயக்கவுள்ள திரைப்படத்தின் கதை தன்னுடையது என புகார் அளித்துள்ளார். இந்த சங்கத்தின் தலைவராக இருப்பவர் இயக்குனர் பாக்கியராஜ். ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் இதேபோன்ற பிரச்சனையில் சிக்கிய போது நியாயம் பெற்று தந்தவர் பாக்கியராஜ். ஷங்கர் படத்திற்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. ஆனாலும், ராம்சரணோடு இணையும் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 8ம் தேதி பாடல் காட்சியுடன் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது.

ef3bfaed6fd65771b23f3760201a0133
shankar

இப்படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் நடிக்கவுள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கவுள்ளார்.

Next Story