More

புதுசாலாம் யோசிக்க முடியாது… பழசுல கொஞ்சம் மசாலா கலந்துக்கலாம்… ஷங்கரின் தந்திரம்

தமிழில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தை தொடர்ந்து படம் நிறுத்த வைக்கப்பட்டது. இடஹி தொடர்ந்து, ஷங்கர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி பக்கம் திரும்பி இருக்கிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்கும் படத்தை ஷங்கர் அடுத்து இயக்க போவதாக அறிவித்து இருக்கிறார். நடிகர் ராம் சரண் நாயகனாக நடிக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் உருவாக இருக்கிறது.

இப்படம் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக தெலுங்கு வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அர்ஜூன், ரகுவரன், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் முதல்வன். படம் ஆகா ஓஹோ ஹிட் அடித்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமாக தான் தெலுங்கு படம் உருவாக இருப்பதாக தெரிகிறது. ராம் சரண் இப்படத்தில் முதல்வராக நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, இப்படத்திற்கு செம எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
 

Published by
adminram

Recent Posts