மரண அடிவாங்கும் தில் ராஜு!.. ஷங்கர் மீதிருந்த நம்பிக்கையும் போயிடுச்சாம்!.. கேம் சேஞ்சர் காலி?..

ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளருக்கு ஷங்கர் மீது இருந்த நம்பிக்கை சுத்தமாக போய்விட்டதாக கூறுகின்றனர்.

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்களுக்கு கதையே சொல்ல மாட்டார் என ஏவிஎம் சரவணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். சிவாஜி திரைப்படம் ஏற்படுத்திய நஷ்டத்தால் தான் அதன் பின்னர் ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பதையே நிறுத்தி விட்டதாக கூறுகின்றனர்.

சிவாஜி படத்தின் கதையை கேசட் மூலமாக ரெக்கார்டு செய்துதான் சங்கர் கொடுத்தார் என்றும் அதன் காப்பியை கூட தயாரிப்பாளர் வைத்துக் கொள்ளக் கூடாது என்றார். அதன்படியே தாங்களும் நடந்து கொண்டதாக ஏவிஎம் சரவணன் அந்தப் பேட்டியில் கூறினார்.

இந்தியன் 2 படத்தின் கதையைக் கூட லைக்கா சுபாஸ்கரன் மற்றும் தமிழ் குமரன் உள்ளிட்டோருக்கு ஷங்கர் சொல்லவில்லை என்றும் கமல்ஹாசனுக்கே கடைசியில் தான் படத்தைப் போட்டுக் காட்டினார் என்கின்றனர்.

இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் பல ஆண்டுகளாக உருவாகி வரும் கேம் சேஞ்சர் திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் மாதம் படம் ரெடி ஆகாது என்று தில் ராஜூவுக்கு முடிவாக ஷங்கர் சொல்லிவிட்டதாக கூறுகின்றனர்.

இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ஷங்கர் இயக்கி வந்த நிலையில், இந்தியன் 2 கதியே இப்படி இருப்பதால், கேம் சேஞ்சர் படத்தின் நிலைமையும் இதை விட மோசமாகவே இருக்கும் என்கிற முடிவுக்கே வந்து விட்ட தில் ராஜு மறுபடியும் தலையில் துண்டு போடும் நிலைமை வந்துவிட்டதே என புலம்பி வருவதாக கூறுகின்றனர்.

Related Articles
Next Story
Share it