தடை நீங்கியது!.. இனிமேல் சினிமாவில் நடிப்பார் வடிவேலு….

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு ஏராளமான படங்களில் நடித்து தன்னை தானே தரம் தாழ்த்தி மக்களை மகிழ்விப்பதில் சிறந்தவர். இன்னும் இவரின் காலி இடத்தை நிரப்ப ஒருவரும் வரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஆனால், ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட பஞ்சாயத்தால் அப்படத்திலிருந்து வடிவேலு விலக, இதனால் பல கோடிகள் நஷ்டம் என அப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க, வடிவேலு படங்களில் நடிக்க ரெட் கார்ட் போட்டனர். இதனால் கடந்த பல வருடங்களாகவே படங்களில் வடிவேலு நடிப்பதில்லை. இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் இவரது மீம்ஸ் தான் முழு நேர பொழுதுபோக்காக இருந்து வருகிறது. வெள்ளித்திரையில் வடிவேலுவை மீண்டும் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஒருபக்கம் அவர் வெப்சீரியஸில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஷங்கருக்கும், வடிவேலுவுக்கும் இடையே சமரசம் செய்ய பல முறை முயற்சி எடுக்கப்பட்டும் அது தோல்வியில் முடிந்தது. தற்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஷங்கர் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றார். அதோடு, லைகா நிறுவனத்திற்கு வடிவேலு படம் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதையடுத்து,  லைக்கா தயாரிப்பில் வடிவேல் நடிக்கும் புதிய படம் விரைவில் தொடங்கவுள்ளது. வடிவேலுவுடனான பிரச்சனையை லைக்கா நிறுவனத்திற்கு ஷங்கர் கை மாற்றிவிட்டதாக தெரிகிறது. 

இதையடுத்து இந்த தகவலை தயாரிப்பாளர் சங்கமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வடிவேல் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்கிற செய்தி சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Published by
adminram