சாந்தனு.. உன்ன என்னைக்கு வெளுக்கப் போறாங்களோ! – மிரட்டும் விஜய் ரசிகர்கள்

நடிகர் சாந்தனது பாக்கியராஜ் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார். எனவே, மாஸ்டர் படம் துவங்கிய போது இப்படம் தொடர்பான அப்டேட்டை கொடுத்தால் அவர்களுக்கு முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டை தருகிறேன் எனக்கூறியிருந்தார். ஆனால், அவரே அப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான பின் அப்டேட் எதுவும் கொடுக்க முடியாமல் அமைதி காத்து வருகிறார். எனவே, மாஸ்டர் அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள் அவரிடம் உரிமையாக கோபித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாஸ்டர் அப்டேட் கொடுத்த டிக்கெட் தரேன்னு சொன்னீங்களே அது ஃபர்ஸ்ட் க்ளாசா இல்லை பால்கனியா.. என்னைக்கி வெளுக்கப் போறாங்களோ புரோ! என கவுண்டமணியின் பிரபலமான செக்கா கேசா ஜிப் வீடியோவை போட்டு விஜய் ரசிகர் ஒருவர் செல்லமாக சாந்தனுவை மிரட்டியுள்ளார்.
இதற்கு தனது தந்தை பாக்கியராஜின் முகபாவனை ஜிப் போட்டோவை சாந்தனு பகிர்ந்துள்ளார்.

Published by
adminram