
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ‘மாஸ்டர்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் திங்கள் முதல் சென்னையில் தொடங்க உள்ளது. ஏற்கனவே சென்னை டெல்லி மற்றும் ஷிமோ ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது என்பதும் இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள் கோரிக்கை விட தொடங்கி விட்டனர்
இந்த நிலையில் பட்டாஸ் படத்தை பார்த்த மாஸ்டர் படத்தில் நடித்த நடிகர் சாந்தனு சினேகாவுக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சினேகாவின் கணவர் பிரசன்னா ‘மாஸ்டர்’ அப்டேட் குறித்து சாந்தனுவிடம் கேட்க, அதற்கு சாந்தனு முன் ‘மாஸ்டர்’ படத்தின் செகண்ட் லுக்கில் இருப்பதுபோல் வாயை ஒரு விரலால் பொத்தி கொள்வது போன்ற எமோஜியை மட்டுமே பதிலாக அளித்து நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். சாந்தனுவின் இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது