">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அவர் எனக்காக உயிரையே கொடுப்பார் – காதலர் பற்றி நெகிழ்ந்த பிரியா பவானி சங்கர்
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அவர் மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதன்பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2-வில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு தனது காதலன் பற்றிய தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரின் காதலர் பற்றி கூறிய அவர் ‘ எந்த ஒரு பிரபல அந்தஸ்தும் இல்லாத நாளிலிருந்து எனக்கு அவரை தெரியும். அதுமட்டுமில்லாமல் என் அப்பாவிற்கு பின் என்னை நன்றாக பார்த்துக்கொள்ளக் கூடியவரும் அவர்தான். இன்னும் சொல்லப்போனால் எனக்காக உயிரையே கொடுக்கும் அளவுக்கு அன்பு செய்பவர். இந்த உறவை நான் உண்மையாகவே மதிக்கிறேன்’ என உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் பேசியுள்ளார்.