ஆபாச பட விவகாரத்தில் தனது கணவருக்கு தொடர்பில்லை என நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்து, விநியோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னிடம் நிர்வாண வீடியோ கேட்டதாக மாடல் அழகி ஒருவர் முன்பே புகார் தெரிவித்தார். அதோடு, ஒரு பெண்ணுக்கு ராஜ் குந்த்ராவின் நிறுவனம் அனுப்பிய இமெயில் வெளியாகியுள்ளது.
வீடியோக்களில் வரும் நடிகைகள் மேலாடையில்லாமல் வர வேண்டும். மேலும் ஆடையில்லாமல் பின்புறத்தையும் கேமராவுக்கு காண்பிக்க வேண்டும் என்று அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பராஸ் ரந்தவா, ஜோதி தாகூர் எடுக்கும் வீடியோக்கள் திருப்திகரமாக இருந்தால், அவர்களுக்கு ரூ. 3 லட்சம் கொடுக்கப்படும். இல்லை என்றால் அந்த வீடியோவை அவர்கள் வேறு யாருக்காவது விற்கலாம் என்று இமெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ் குந்த்ராவின் நிறுவனம் பல பேருடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்தி தொலைக்காட்சி தொடர்கள், பாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவருக்கும் அந்த இமெயில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தனது கணவருக்கும், ஆபாச பட தயாரிப்புக்கும் சம்பந்தம் இல்லை. அவர் ஒரு அப்பாவி என போலீசாரிடம் ஷில்பா ஷெட்டி விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…