
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் ‘ பகல்நிலவு சீரியல்’ மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

அதன் விளைவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், அங்கு பெரிதாக எதுவும் செய்யாமல் வெறும் அழகு பொம்மையாக வலம் வந்து, பாடல்களுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், தனக்கு புடவையும் கட்ட தெரியும் என கூறுவது போல் புடவையில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.





