விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன்? - தெறி மாஸ் அப்டேட்....

by adminram |

6d46920a4fcd81e83a7773de032f5833-2

லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மாநாடு, கைதி, மாஸ்டர் என அதிரடி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜும், கலைஞானி கமலும் இணையவுள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

74d91aeb36c9255a317d53323e34e90e

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் டெரர் லுக்கில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோரின் தோற்றம் இருந்தது படத்தின் மீது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியது. ஒரு நாள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரியாகவும், பஹத் பாசில் விஞ்ஞானியாகவும், டெடர் வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளனர்.

51ede842253ad0de52e3437e599e6ab4

இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிக்கவுள்ளார் என தகவல் கசிந்துள்ளது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story