Connect with us
banner

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகர் சதிஷ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகர் சதிஷ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

காமெடி நடிகர்  சதீஷ்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரில்லா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியின் டூப் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் ஜீவா, பாருங்கள் சதீஷ் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார் என்று சொல்கிறார்… உடனே, நான் தான் கஷ்டப்படுகிறேன்… ரசிகர்களுக்காக தான் எல்லாம் என்று சதீஷ் நகைச்சுவையாக கூற இந்த வீடியோ முடிகிறது. இது தற்ப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

28c170b94c18db8527fc500b66df4951

ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. வாரிசு நடிகர்களாக இருந்தால் கூட அவர்களுடைய நடிப்பு, மற்றும் கதை தேர்வு உள்ளிட்டவை மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நடிகர்களாக நிலைக்க முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.காமெடி நடிகர்களுக்கும் இதே நிலை தான்… வித்தியாசமான காமெடி மூலம் அவர்கள் தங்களை நிரூபித்தால் மட்டுமே திரையுலகில் ஜெயிக்க முடியும்.

அந்த வகையில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ். மேடை நாடகங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி தற்போது பெரிய திரையில் அசத்திவரும் சதீஷ்.. விஜய், தனுஷ் , சிவகார்த்திகேயன் , என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top